search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் பேச்சு"

    செல்போனில் கிண்டலாக பேசியதை வெளியிட்டதால் நண்பனை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    திருத்தணி:

    திருவாலங்காடு ஒன்றியம் தாழவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் (18). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடராமன் (26). இவர்கள் இருவரும் நண்பர்கள்.

    நேற்று முன்தினம் இருவரும் விளையாட்டாக, தாழவேடு மக்களை பற்றி வெங்கடராமன் கிண்டல் செய்து பேசினார். அதை விஜய் அலைபேசி மூலம் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பரவ விட்டார்.

    இதையடுத்து தாழவேடு காலனி மக்கள், நேற்று காலை திருத்தணி-நாகலாபுரம் நெடுஞ்சாலையில் தாழவேடு பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். சமரசம் செய்ய வந்த திருத்தணி போலீசாரிடம் வெங்கடேசனை கைது செய்து வேண்டும் என வலியுறுத்தினர். இதை அறிந்ததும், வெங்கடராமன், விஜய் ஆகியோர் தலைமறைவாகினர். இதையடுத்து வெங்கடராமனின் தந்தை கன்னியப்பனை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    நேற்று இரவு விஜய், வெங்கடராமன் தமிழக- ஆந்திரா எல்லையான பொன்பாடி அருகே வயல் வெளியில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். போதையில் வெங்கடராமன், உன்னால் தான் நான் வீடியோவில் நடித்தேன், என் தந்தையை போலீசார் பிடித்துச் சென்றனர் என கூறி கட்டையால் விஜய்யை தாக்கி, கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

    விஜய் இறந்ததை உறுதி செய்ததும் வெங்கடராமன் திருத்தணி போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    திருபுவனையில் செல்போனில் அடிக்கடி பேசிக் கொண்டு இருந்ததை தாய் கண்டித்ததால் இளம்பெண் மாயமானார்.

    திருபுவனை:

    திருபுவனை பாரதியார் வீதியை சேர்ந்தவர் பலராமன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி திலகவதி. இவர்களது மகள் திவ்யா (வயது 19).

    இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். திவ்யா அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். இதனை அவரது தாய் திலகவதி கண்டித்து வந்தார்.

    இந்த நிலையில் சம்ப வத்தன்றும் வீட்டில் திவ்யா செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். இதனை திலகவதி கண்டித்ததால் திவ்யா மனவருத்தத்துடன் இருந்தார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது வீட்டில் இருந்த திவ்யாவை திடீரென காணாமல் திலகவதி அதிர்ச்சி அடைந்தார்.

    உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் திவ்யா இல்லை. இதையடுத்து திலகவதி தனது மகள் மாயமானது குறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயதேவன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×